
நஞ்சாய் தழைத்திருந்த
வேத விருட்சங்களில்
அமிலம் பாய்ச்சியவன்
செல்வங்களை துரத்தி
கோபுரங்களில் வீற்றிருந்த
குப்பைகளை
துடைத்தெறிந்த சூறாவளி
ஆதிக்கத்தின்
ஆணிவேரை சாய்க்க வந்த
கோடாரி
கற்பனைக் கவிதைகளில்
பெண்ணியம் பேசாது
வாழ்வில் பேசிய
மக்கள் கவி
குப்பைக் கழிவுகளே!
உம் ஆணவ மழையில் கரைந்திட
அவன் உப்புத் துகளல்ல
பகைவர் நடுங்கிடும்
கரும் பாறை!
கரும் பாறை!
நன்றி: முத்துகுமரன்
Leave a Reply