காலங்கள் மாறுகிறது
கடமைகளும் மாறுகிறது. – ஆனால்
வறுமை மட்டும் மாறவில்லை.
சட்டங்கள் மாற்றமாகிறது
திட்டங்கள் வகுக்கப்படுகிறது
வறுமை மட்டும் தீர்க்கப்படவில்லை!
வானமழுதால்
வெள்ளம் புரளும் அந்த
புறம்போக்கு நிலம்.
சட்டிச்சோற்றுக்காய்
வற்றிய வயிறுகள்
வாழுகின்ற இல்லம்.
கந்தையும் கிழிசலும்
அவர்களது உடை.
ஒட்டிய வயிற்றுடன்…..
பார்க்க நெஞ்சு குமுறுகிறது.
அவர்கள் உடம்புபடும்பாட்டை!
பாவங்கள் நீங்க
புண்ணீயம் தேடி செல்கிறான் காசி –ஆனால்
ஏழைகளுக்கு உதவினால் பாவம் தீராதா.. நீ யோசி!!!
Leave a Reply