தமிழ்மொழி வளர்ச்சிக்கான பணிகளாகத் தமக்குத் தோன்றி்யவற்றை மாணவர்கள்,
பெராசிரியர்கள்,தமிழறிஞர்கள் பொதுமக்கள் அடங்கிய அவைகளில் வேளிப்படையாக
தந்தை பெரியார் எடுத்துரைத்தார்.
இதனால் தமிழ் எழுத்துத் திருத்தி அமைக்கப்படுவது தேவை உருவாக்குவதில் ஒரு நாற்பதாண்டு காலத்தில் வெற்றி பெற்றார்.
இன்று நம்மால் எழுதப்படும் ‘லை` ‘னை` எழுத்து என்னும் சிந்தனையை இவர்களிடையே
வடிவங்களை ‘பெரியார் லை`, ‘பெரியார் னை`, ‘விடுதலை லை`, ‘விடுதலை னை` என்றே பலரும் குறுவது கொன்று இதை நாம் உணரலாம். அதேபோல் தமிழர்க்கான இலக்கியம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதையும், எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் பற்றி விரிவாகவே அவர் எடுத்துரைத்தார்.
தமிழர்க்கான இலக்கியங்களுள் திருவள்ளுவரின் திருக்குறளைப் படித்தவர்கள் -படிக்காதவர்கள் அனைவர்க்கும் அடையாளம் காட்டி, அதன் வழியாகப் புராண, இதிகாச முடனம்பிகை நுல்களைப் புறக்கணிக்கிற மனநிலையைத் தமிழரிடையே தோற்றுவித்தார்.
அதையே ஒரு பணித்திட்டம்போல் மேற்கொன்று, 1948இல், சென்னையில் முதன்முதலாகத் ‘திருக்குறள் மாநாடு’ நடத்தியவர் அவரே.
அதே நேரத்தில் திருக்குறள் பற்றிய தம் கருத்துகளையும் ஒளிவு மறைவின்றிக் கூறியுள்ளார்.
இதனால் தமிழர்க்குரியதான நல்லதோர் நுலை அடையாளம் காட்டியவர் பெரியார் எனவும் நாம் துணிந்து கூறலாம்.
பின்வரும் செய்திகளைக் கொன்று இதை நாம் உணரலாம்:
நமது இலக்கியம் எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் அதன் மதிப்பு, அந்த நூலின் பயன
அளவாகக் கொண்டதே ஒழிய, அதை ஆக்கியவனையோ, அதில் உள்ள தெய்வீகத்
தன்மையையோ, இலக்கண இலக்கிய அள வையையோ, அமைப்பையோ, அற்புத தன்மையையோ அளவாகக் கொண்டது ஆகாது.இலக்கியம் என்பது நாகரீகத்தை புகத்த வேண்டும்.
மக்களிடம் உயரிய குணங்களைப் புகுத்துவதாக இருக்க வேண்டும். இலக்கியம் எதற்காக? இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்? எப்படிப்பட்டதை இலக்கியம் என்று சொல்லலாம்? அவை எதற்காக இருக்க வேண்டும்? என்பது பற்றிச் சிந்தித்தால், மனிதனின் வாழ்க்கைக்கு உயிர் மட்டும் அல்லாமல் மனித சமுதாய வளர்ச்சிக் கும் ஏற்றதாக என்பது என் கருத்து.
நம் மக்களிடம் நிரம்பியிருக்கும் மடமை, மானமற்ற தன்மை, இழிநிலை, அறிவற்ற தன்மை இவைகளைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்தின் மீதே “இலக்கிய மறுமலர்ச்சி” பற்றிச் சிந்திக்க வேண்டும்.
மதம், கடவுள் சம்பந்தமற்ற – யாவரும் பொதுவான இயற்கை ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத விஞ்ஞானத்தைப் பற்றிய இலக்கியம் ஆகியவைகள் மூலம்தான் ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மையடைய முடியும் என்பது மாத்திரமல்லாமல், அதைக் கையாளும் மக்கள் ஞான முடையவர்களாவார்கள்.
இலக்கியம் எதற்காக? இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்? எப்படிப்பட்டதை இலக்கியம் என்று சொல்லலாம்? அவை எதற்காக இருக்க வேண்டும்? என்பது பற்றிச் சிந்தித்தால், மனிதனின் உயிர் வாழ்க்கைக்கு மட்டும் அல்லாமல் மனித சமுதாய வளர்ச்சிக்கும் ஏற்றதாக இருக்கவேண்டும் என்பது எனது கருத்து.
ஆனால், நம் நாட்டு இலக்கியங்களோ புலவர்களும் மதவாதிகளும் ஆரியரும் பிழைக்கத் தன் இருக்கின்றன. “வடமொழி வேதங்கள் ஆரியருக்கென்றால் – தேவாரம், திருவாசகம், பிரபந்தங்கள்தான் நமது வேதங்கள் என்று ஒரு தடவை மறைமலையடிகள் சொன்னார்கள்.
கடவுளைக் ‘கண்ணே‘, ‘மணியே!’ என்று பிரார்த்தித்தால் அது வேதமாகுமா? முடைத்தனமா பக்திப் பாடல்களைத் தவிர நமக்கு இலக்கிமே இல்லை…………
(பெரியார் சிந்தனைகள்,பக்.1257)
விமலேந்திரா திருஞானசம்பந்தர்
31.08.2008
உங்களது கருத்துக்களை பதிக்க மறவாதீர்கள
Leave a Reply