எங்கள் இன மக்களிடம் நாங்கள் பகுத்தறிவு பரப்புவதை தடுக்க, நீ யாரடா?:
இயக்குனர் சீமான்
என் அருமை மக்களே, இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் ஒரு பார்ப்பான் தீ
மிதிச்சிருக்கானா? காவடி தூக்கி ஆடியிருக்கிறானா? அலகு குத்தியிருக்கானா?
பறவைக் காவடியில் தொங்கியிருக்கானா? என்ன செஞ்சிருக்கான். எல்லாத்தையும்
கொண்டுபோய் உள்ளே கொடுத்தா சின்ன மணியை அடிச்சிட்டு சுலோகம்
சொல்லிவிட்டுப் போயிடுவான். அப்புறம் சொல்லுவான், செய்யும் தொழிலே
தெய்வம் என்று. செய்யும் தொழிலே தெய்வம்னா நீ கொஞ்ச நாள் மலம் அள்ளு,
நாங்கள் கொஞ்சம் நாள் மணி அடிக்கிறோம் வா! கொஞ்ச நாள் பொணம் எரியுங்க;
நாங்கள் பூஜை பண்றோம் என்று சொன்னா வலிக்குதுள்ளே உனக்கு. இது எவ்வளவு
பெரிய மோசடி.
இட ஒதுக்கீட்டை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த ஜீவா: கொளத்தூர் மணி
பெரியாருக்கு எதிர்ப்பு என்ற பெயரில் செயல்பட்ட பலரும், பாதை தவறி
கொள்கைக்கு எதிராக செயல்படத் தொடங்கி விடுகிறார்கள். தோழர் ஜீவானந்தம்
பெரியாரை விட்டுப் பிரிந்தவுடன், பெரியார் ராமாயண எதிர்ப்புப் பிரச்சாரம்
செய்தார் என்பதற்காக, அவர் ராமாயண ஆதரவுப் பிரச்சாரம் செய்தார். கம்பன்
கவிதையில் பொதுவுடைமையை தேடினார். இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஜீவா
பிரச்சாரம் செய்தார். தா.பாண்டியன் ஜீவாவிடம் இடஒதுக்கீட்டை ஏன்
எதிர்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு நான் ஒரு பொதுவுடைமைக்காரன் என்பதால்
எதிர்க்கிறேன் என்று ஜீவா பதில் கூறியதாக தோழர் தா.பாண்டியன் தனது நூலில்
பதிவு செய்துள்ளார்.
இந்தியா விற்பனைக்கு தயார்! – இராசேந்திரன்
இந்தியாவின் நாடாளுமன்றத்தை தேசியக் கட்சிகளே ஆட்சி செய்யும் அத்தியாயம்
முடிவுக்கு வந்து விட்டது. மாநிலக் கட்சிகள் தான் நாடாளுமன்றத்தையே
நிர்ணயிக்கின்றன. அதனால் தான் மாயாவதியும், முலாயம்சிங்கும் நம்பிக்கை
ஓட்டெடுப்பின் நட்சத்திரங்களாகியுள்ளனர். மேற்கு வங்கம், திரிபுரா, கேரளா
என்ற மாநிலங்களைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் அதிகாரத்தைப் பிடிக்க
இயலாத தேசிய கட்சிகளான இடதுசாரிகள் உண்மையில் மாநிலக் கட்சிகள் தான்!
இந்த மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்தை நம்பியே
செயல்படுகிறார்கள். தேசிய கட்சிகளும், இடதுசாரி கட்சிகளும் இந்த
எதார்த்தத்தைப் புறக்கணித்துவிட்டு, ஒருமைப்பாடு, தேசியம் என்ற
முழக்கங்களுக்குள் முடங்கிக் கிடப்பதில் அர்த்தமில்லை.
மக்களை பலிகடாவாக்கும் மதவெறி குண்டுகள் – விடுதலை இராசேந்திரன்
அறிவியல் வளராத காலங்களில் உருவான மதங்களும், அதன் வாழ்க்கை முறைகளும்,
கோட்பாடுகளும் இன்றைய வாழ்க்கையோடு முரண்பட்டு, காலாவதியாகிவிட்ட
நிலையில், மதத்தின் பெயரால் சுரண்டும் சக்திகள் இந்த மதங்களை
உயிர்ப்புடன் வாழ வைக்க அதீதமான முயற்சிகளில் இறங்கி வருகின்றன.
மதத்துக்கும், கடவுளுக்கும் உறவுகளை உருவாக்கியவர்கள் ஒரு கட்டத்தில்
மதத்துக்கும், அரசியலுக்குமான உறவை வலிமைப்படுத்தி, அதற்கு கடவுளையும்
கடவுள் நம்பிக்கையையும் கருவி களாக்கிவிட்டனர். அதனால்தான் மதத்தின்
பெயரால் நடக்கும், குண்டு வெடிப்புகளில் அரசுகளும், அரசியல்களும், அரசு
அமைப்புகளான உளவு நிறுவனங்களும் விவாதத்துக்கு உள்ளாகின்றன.
ராமன் பாலம் – கடலுக்கு கீழே போனது ஏன்? – சீமான்
இந்து மதம், இந்து என்று சொல்லுகிறான் என்றால் எதற்காக? வாக்கு சேகரிக்க.
சாதிக் கட்சியாக இருந்தால் எந்த இடத்திலும் கட்டிய முன் பணம்கூட பெற
மாட்டோம் என்பது தெரியும். அதனால் தான் கடவுளின் பெயரால் மதத்தின்
பெயரால் இங்கே பயன்படுத்தி வருகிறான். எப்படி கிருத்துவனுக்கு பல நாடுகள்
இருக்கு, இசுலாமியனுக்கு, பவுத்தனுக்கு பல நாடுகள் இருக்கு. ஆனா,
இந்துக்களுக்கு ஒரு நாடு இல்லை. யாரு இந்து இங்கே, தாழ்த்தப்பட்ட பள்ளன்,
பறையன் இந்துவா, ஏன் இந்த இந்து மதத்தை சாட வேண்டி இருக்கிறது. மக்களே,
ஒரு தாழ்த்தப்பட்டவர், ஒரு கிருத்துவனாக மாறிவிட முடியும். ஒரு
இசுலாமியனாக மாறிவிட முடியும். ஆனால், இவர்கள் பார்ப்பனாக மாறி விட
முடியுமா? ஒரு போதும் இந்த நாட்டில் ஆக முடியாது. அப்படியானால் எது
கொடுமை?
Leave a Reply