சரஸ்வதி பூஜை கொண்டாடும் தமிழா சரசுவதியின் கதையை அறிவுப்பூர்வமாக அறிந்து கொண்டுதான் கொண்டாடுகிறாயா? சரசுவதியின் கதையை இப்போது அறிந்து கொள்.அதன்பின் சரசுவதி பூஜை கொண்டாடியது எவ்வளவு அசிங்கமான செயல் எனபதை உணர்வாய்!. இதோ சரசுவதியின் கதை:
சரஸ்வதியா? சரசவதியா?
கல்வித்துறையின் கடவுளாகக் கற்பிக்கப்பட்டுள்ள கலைவாணி (சரஸ்வதி) யின் பிறப்புக் கதையும் குளறுபடியாகவே இருக்கிறது. மற்றத் தெய்வங்களின் விரசமான கதைக்கு எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை இது!
இவளின் பிறப்புப்பற்றி ‘அபிதான சிந்தாமணி’யின்
588- ஆம் பக்கம் தரும் செய்திகள் வருமாறு.
1. பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டவள்.
2. ஒருகாலத்து அகத்தியரிடம் பிறந்தவள்.
3. பிரம்மன் யாகம் செய்யும்போது, யாக கலசத்தில் தோன்றியவள்.
பிறப்புப் பற்றிய மூன்று செய்திகள் இவை.
இவளின் நன்னடத்தை(!)களைப் பற்றிப் புராணங்கள் தாங்கும் புத்திசாலித்தனமான கதைகளையும் கொஞ்சம் நினைவூட்டிக்
கொள்வோம்.
பிரம்மனின் சிருஷ்டியில் உருவான சரஸ்வதி அழகியென்றால் அழகி! கொள்ளை அழகி!! அந்த அழகில் இளகிய படைப்புக் கடவுளின் தாபவெள்ளம் உடைப்பெடுத்தது. பிறக்கும் போதே வெறும்மேனியுடன் பிறக்கவில்லை இவள்! வெண்ணிற ஆடை யுடனான மேனி, ஜெபமாலை தாங்கிய கை, இன்னொரு கையில் புத்தகம், இருந்த மீதி கரங்கள் இரண்டிலும் வீணை.
இந்த கோலத்தில் வந்துவிட்ட தனது சிருஷ்டியில் தானே திருஷ்டி போட பிரம்மனுக்கு மனம் உசுப்பியது. ‘காமம் கண்ணறியாது’ என்ற மொழிக்கு ஒரு ஸ்தானமாகப் பிரம்மனின் செயல் விளங்கியது.
“பெற்ற மகளோ! செத்த நாயோ!” போன்ற கொச்சை மொழியின் துவக்கத்தை இங்கிருந்துதான் துவக்கியிருக்கவேண்டும். அந்தத் தேவ மங்கை அவ்வளவு இலகுவில் இணங்க விடுவாளா? பிகு இல்லாமல் சுவை கிடையாது என்ற ‘தொழில் சூத்திரத்தை’உணர்ந்த சகல கலாவாணி ஆயிற்றே அவள்! ஓடிவரட்டுமே என ஓட்டம் பிடித்தாள் எப்படி? தானாக அல்ல! தண்ணீராக!
உருமாறி, திசையெட்டும் திக் விஜயம் செய்தவளை திரும்பித் திரும்பிப் பார்த்தான் பிரம்மன். ஒரு தலையால் ஆகிய காரியமல்ல இது என்று முளைக்க வைத்தான் மேலும் மூன்று தலைகளை.
ஒரு முகப் பிரம்மா, சதுர் (நான்கு) முகப்பிரம்மாவானான். நதியை வளைத்துப் பிடித்து, பழைய நிலைக்குத் தளதள மேனியாக்கி, தழுவிக் கழித்தான் பிரம்மன் நழுவி ஓடிவிடாமல் கழுத்தில் தாலிச் சரட்டையும் தவழவிட்டு தாரமாக்கிக் கொண்டான். தாலி கட்டித் தாரமாக்கி, திறமை காட்டி ஈரமாக்கினால் மட்டும் ஒரு மனைவி நம்மிடம் நீடிப்பாளா, நிலைப்பாளா என்று பிரம்மன் மனத்தைப் போட்டு அலட்டிக்
கொண்டான்.
“சிறைக்காக்கும் காப்பு எவன் செய்யும்?” என்றாலும் அதைவிடக் கதி இல்லை என்று கருதினானோ என்னவோ, கல்விக்கு அதிபதியான அவளை வாய்க்குள் போட்டுக் கொண்டான். காவலுக்கு ஆள் வேண்டுமே! பற்களை உயிர்பித்துப் போர் வீரர்களாக்கிவிட்டான்.
கிளர்ச்சியை மனம் கிளப்பும்போது, பள்ளியறையிலும் நாடி தளர்ந்து ஆடிக் குலைந்ததும் பிரம்மனின் வாயாகிய சிறைச்சாலையிலும் படுக்கையறைப் பாவையாகக் காலந்தள்ளினாள் சரஸ்வதி. இப்படி இருந்தது ஒரு நாளோ , ஒன்பது நாளோ அல்ல ; நூறு தேவ வருடம் இதே வேலை. ஆசைக்கும் மோகத்திற்கும் அத்தனை நாள், இத்தனை நாள் என்ற கணக்கையெல்லாம் பிரம்மன் பொய்யடித்து விட்டான்.
இத்தனை நாளைக்குபின் பிரம்மனுக்கு லேசான ஒரு சலிப்பு! மகனை அழைத்து , மனைவிக்கு மணாளனாக்கி வைத்தான். மகனே என்று அழைக்கவேண்டியவனிடம், மன்மத சுகங்காண கலைவாணியும் ‘காலெடுத்து’ நடந்தாள். ‘சித்தி’ முறையாயிற்றே என்ற வெட்கம் சிறிதுமின்றி சிருங்காரத்தைப் பிழிந்தான் பிரம்மபுத்திரனும்-பிரம்மனின் மகன் பெயர் சுவாயம்பு.
பல புராணங்களில் இருந்து சலித்தெடுத்த பல ருசிகரக் கதைகளை இப்படியாகச் சொல்லிப் போகின்றது அபிதான சிந்தாமணி.
பரிதாபத்திற்குரிய பக்தர்களை ஒரு பார்வை பார்ப்போம். அருமை பக்தர்களே, வினாவுக்கு விடை கொடுங்கள்!
1. சரஸ்வதி பிரம்மனால் உண்டானவளா? அகத்தியரிடத்தில்
உற்பத்தியானவளா?
2. பிறக்கும்போதே ஜெபமாலை, புத்தகம், வீணை , வெண்ணிற
ஆடை, இத்யாதி இத்யாதி சர்வலங்கார மேக்கப்புடன்
எப்படிப் பிறக்க முடியும்?
3. மகன் முறை கொண்டாட வேண்டியவனிடம், மையல் கொள்
பவள் தான் தெய்வப் பிறவியா?
4 தழுவ வந்ததும் தண்ணீராய் ஓடிய விந்தை, நான்கு புறமும்
ஓட நான்காய்த் தலைகள் ஆன கதை நம்பமுடிகிறதா
நண்பர்களே!
5. தாலிகட்டி மனைவியான பின்பும், சிறைவைக்கும் நிலைக்குத்
தரங்கெட்டவனாக வர்ணிக்கப்படுபவனைத் தெய்வமாக
ஏற்க முடியுமா?
6. அதைக் கிழிப்பான்- இதைக் கிழிப்பான் என்று பிரம்மன்
புகழ்பாடும் பக்தர்களே! தன்னால் உருவானவளே தனக்குத்
தண்ணீர் காட்டினாள் என்று சொல்லும் நிலைக்கு பலவீனப்
பேர்வழியாகிவிட்ட கடவுளின் சக்தியில் நம்பிக்கைக் கொள்ள
எப்படித் துணிகிறீர்கள்?
7. இப்படியெல்லாம் அயோக்கியத்தனம் பண்ணியதால் தான்
பிரம்மனை நாங்கள் கோவில் கட்டி கும்பிடுவதில்லை என்று
நொண்டிச் சமாதானம் கூறுபவர்களே!
8. மொத்தமாக ஒரு கேள்வி.
இக்கதையில் எந்த ஒரு வரியை நம்ப முடியும்? இந்த மாதிரி
கடவுளையும்-அதன் லீலைகளுக்கு இலக்கான அம்மணியையும்
வணங்கும் போக்கு எதைக் காட்டும்?
——————-நன்றி : நூல்: “கடவுளர் கதைகள்” பக்கம் 32 -35
sellakumar
its very intrest to studying
david
what a point. only u guys can think and ask these sort of intellectual questions. bravo
Jegaveeraphandian
I need reply from the world no.1 hindu leader.
hehe
tamil people want correct tamil history and its associated scientific terms by intellectual analysis.
we dont want tamil translation of sanskrit documents.
tamil is the world’s first language,there is no need to write such bad articles in tamil.
agastya is a star,we want that science.
if we have invented a new software for internet research-can we give a tamil name to it what would it be?
ram
நெல்லை மேலப்பாளையம் ரகுமானியாபுரம் வடக்குத் தெருவில் வசிக்கும் முஸ்லிம் மக்களில் 11 குடும்பங்களை சேர்ந்த சுமார் 75 பேர், பள்ளிவாசலில் தமிழில் குரான் வாசித்ததற்காகவும், மார்க்க விளக்கக்கூட்டம் போட்டதற்காகவும் ஜமாத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். (குமுதம் ரிப்போர்ட்டர் 18.05.2003) தமிழுக்காக ஏங்கும் அந்த முஸ்லிம்களின் அழுகுரல் கேட்கிறதே! அந்த அழுகுரல் தமிழர் தலைவரான உங்கள் காதுகளில் விழவில்லையா? அல்லது விழுந்தும் பயத்தில் வேர்த்து இருக்கிறீர்களா?
கோயிலில் தமிழ் அர்ச்சனை வேண்டுமா, வேண்டாமா என்று பட்டிமன்றம் முதல் மாநாடு வரை கூடி விவாதிக்கும் தமிழ் அறிஞர்கள் மற்றும் தி.க. வினர் இந்த சமயத்தில் மட்டும் எங்கு தொலைந்து போனார்களோ தெரியவில்லை!
தமிழில் மசூதியில் வழிபாடு நடத்தக்கூடாது என்று சொன்ன முஸ்லிம்களை இதுவரை வீரமணி கண்டிக்காதது ஏன்? இதுவரை அதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தாதது ஏன்? தமிழில் வழிபாடு நடத்தியதால் ஜமாத்திலிருந்தே விலக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்றால் விலக்கியவர்கள் தமிழ்மேல் எவ்வளவு வெறுப்பு கொண்ட முஸ்லிம்களாக இருக்கவேண்டும்? அவ்வளவு வெறுப்புக் கொண்ட முஸ்லிம்களை இதுநாள்வரை வீரமணியோ, மற்ற தமிழறிஞர்களோ கண்டிக்க முன்வரவில்லையே! இதுதான் தமிழ்பற்றா? இதுதான் தி.க.வினர் தமிழுக்கு ஆற்றும் தொண்டா?
http://www.facebook.com/photo.php?fbid=172315292938600&set=a.151408498362613.1073741828.151403351696461&type=1&permPage=1
ram
46 வயதுவரை ஈ.வே. ராமசாமி கொண்ட கடவுள் நம்பிக்கை!
ஈ.வே. ராமசாமி நாயக்கரின் முதல் குடியரசு இதழ் 02-05-1925 -இல் வெளியானது. அதில குடியரசு என்று தலையங்கம் இட்டு இவ்வாறு இருக்கிறது:-
‘‘தாய்திரு நாட்டிற்கு யாம் இதுகாறும் இயற்றிவரும் சிறு தொண்டினை ஒரு சிறு பத்திரிகை வாயிலாகவும் எம்மால் இயன்ற அளவு ஆற்றிவரல் வேண்டுமென இரண்டாண்டுகளுக்கு முன்னர் எம்மிடத்து எழுந்த பேரவா இன்று நிறைவேறும் பேற்றை அளித்த இறைவன் திருவடிகளில் இறைஞ்சுகின்றோம்.’’
இவ்வாறு துவங்கும் தலையங்கம்
‘‘இப்பெருமுயற்சியில் இறங்கியுள்ள எமக்குப் போதிய அறிவையும், ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்தருள்பாலிப்பானாக’’
என்று முடிகிறது.
மேலும் அதே குடியரசில்,
‘‘இம்மண்ணுலகை நீத்து விண்ணுலகமெய்திய செய்தியைக் கேள்வியுற்று நாம் பெரிதும் வருந்துகின்றோம். அவரது இடது கன்னத்தில் முளைத்த சிறு கொப்பளமே அவரது ஆவியைக் கொள்ளை கொண்ட கூற்றுவன்! அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்வானாக’’
என்று இருக்கிறது.
ஈ.வே. ராமசாமி நாயக்கரால் ஆரம்பிக்கப்பட்ட, ஈ.வே. ராமசாமி நாயக்கரை ஆசிரியராகக் கொண்ட குடியரசு இதழ் இறைவனைப் பற்றிக் கூறுகிறதென்றால் அதில் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு உடன்பாடு உண்டு என்றுதானே அர்த்தம். மேலும் தலையங்கங்கள் தன்னால் எழுத்தப்பட்டது என்று ஈ.வே. ராமசாமி நாயக்கரே எழுதியிருக்கிறார். அப்படி இருக்கும்போது குடியரசில் எழுதப்பட்ட, தலையங்கத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு உடன்பாடு உண்டு என்றுதானே பொருள்!
இந்த ஆதாரங்கள் கூட போதாது என்பவர்களுக்கு மேலும் சில ஆதாரங்கள் இதோ!
அதற்குமுன், வீரமணியின் பொய்!
வீரமணியிடம், ‘பெரியார் பிறவி நாத்திகரா? அல்லது (பின்தாங்கிய) வயது வந்தபின் நாத்திகரா?’ என்று கேள்வி கேட்டதற்கு, வீரமணி, ‘‘அய்யாவின் கூற்றுப்படி அவர்களுக்குத் தெரிந்த காலம் முதல் கடவுள் நம்பிக்கை இருந்ததாகத் தெரியவில்லை என்றாலும் குடியரசின் துவக்க கால இதழ்களில் கடவுள் பற்றி சில தலையங்கங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதாலோ அவர் பிறகு நாத்திகரானார் என்று குறிப்பிட முடியாது. அப்போது உடன் இருந்தவர்கள் எழுதவும் ஒருவேளை அனுமதித்திருக்கக்கூடும்’’ என்று கூறுகிறார். (நூல்:- வீரமணியின் பதில்கள்)
வீரமணி சொல்வதுபோல வைத்துக் கொண்டாலும் நாத்திகப் பத்திரிக்கையில் ஆத்திகக் கருத்துக்களை ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் அனுமதித்தார்? ஈ.வே. ராமசாமி நாயக்கர் அப்போது அனுமதித்தார் என்றால் அவர் வழிப்படி நடக்கும் தாங்கள் உண்மை இதழிலும் விடுதலை நாளேட்டிலும் கடவுளை வேண்டுகிற, கடவுளை நம்புகிற கட்டுரைகளை எழுத அனுமதிப்பீர்களா?
ஆனால் வீரமணி சொல்கின்ற மாதிரி உண்மை அதுவல்ல. ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னுடைய 46 வயது வரை கடவுளை நம்பினார். அதை மறைக்க ஈ.வே. ராமசாமி நாயக்கரும், வீரமணியும் பொய் சொல்கிறார்கள். ஈ.வே. ராமசாமி நாயக்கரும் அவருடைய சீடர் வீரமணியும் பொய் சொல்வதில் வல்லவர்கள். இருப்பினும் உண்மையை யாராலும் மறைக்க முடியாது என்பதை இவர்களுக்கு நாம் எடுத்துக்காட்டுவோம். இதோ! அதே முதல் குடியரசில் ஈ.வே. ராமசாமி நாயக்கரே பத்திரிகாலய திறப்பு விழாவில் பேசிய பேச்சு வெளியிடப்பட்டிருக்கிறது.
அதில்,
‘‘ஸ்ரீமான் ஈ.வே. ராமசாமி நாயக்கர் அவர்கள் ஸ்ரீலஸ்ரீ சுவாமிகளைப் பத்திரிகாலயத்தைத் திறந்து வைக்கும்படி கேட்டுக்கொண்டபோது கீழ்க்கண்டவாறு பேசினார்’’ என்று குறிப்பு எழுதி அதன் கீழ் ஈ.வே. ராமசாமி நாயக்கர் பேசிய பேச்சு அச்சிடப்பட்டு இருக்கிறது.
மேலும் அதில்,
‘‘இப்பத்திரிகாலயத்தை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீசுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை என்றும் நிலைபெற்று மற்ற பத்திரிகைகளிடமுள்ள குறையாதுமின்றி செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன்’’ என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் பேசியிருக்கிறார்.
இதன்மூலம் நமக்கு தெரிவதென்ன? ஈ.வே. ராமசாமி நாயக்கர் கடவுள் மீது 46 வயது வரை நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதுதானே! மேலும் சில ஆதாரங்கள் இதோ!
பேராசிரியர் ந.க. மங்கள முருகேசன் என்பவர் ‘சுயமரியாதை இயக்கம்’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலுக்கு மு. கருணாநிதி அணிந்துரையும், க. அன்பழகன் வாழ்த்துரையும், தி.க. பொதுச்செயலாளர் கி. வீரமணி பாராட்டுகளையும் வழங்கியுள்ளனர். இப்படிப்பட்ட இந்நூலில் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கடவுள் நம்பிக்கையைப் பற்றி வருபவற்றைப் பார்ப்போம்.
* வ. வே. சு. அய்யர் மறைவு குறித்து குடியரசில் பெரியார் எழுதுகையில் ‘‘அவரது ஒரே புதல்வன் நிலை கண்டு எமதுள்ளம் நடுக்கமெய்துகிறது; எல்லாம் ஆண்டவன் செயல்’’ என்று எழுதினார்.
(குடியரசு 07-06-1925)
* காந்தியடிகள் உண்ணா நோன்பு இருந்தபோது ‘‘தப்பிதம் செய்த மக்களை தண்டித்தல் தவறு என உணர்ந்து அவர்களைப் பரிசுத்தப்படுத்த மகாத்மா உண்ணாவிரதம் மேற்கொண்டதை நினைக்க, அவருடைய அரிய மேன்மை மலை மேலேற்றிய தீபம் போல் ஜொலிக்கிறது. அஹிம்சையின் தத்துவமும் விளங்குகிறது. உண்ணாவிரதத்தின் போது அவருக்கு போதிய வலிமை அளித்த கடவுளுக்கு எமது வணக்கம்’’ என்று பெரியார் எழுதினார்.
(குடியரசு 06-12-1925)
* சித்தரஞ்சன் தாசின் புதல்வர் மறைவு குறித்து எழுதுகையில் ‘‘சென்ற ஆண்டில் விண்ணவர்க்கு விருந்தினராய்ச் சென்ற தேசபந்து சித்தரஞ்சன் தாசின் அருமையான ஏகபுதல்வன் கடந்த ஜீன் மாதம் 26-தேதி இறைவன் திருவடியெய்தினார் என அறிய நாம் பெரிதும் வருந்துகின்றோம்’’ என்று எழுதினார்.
(குடியரசு 04-07-1926)
மேற்கண்ட ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது ஈ.வே. ராமசாமி நாயக்கர் கடவுள் நம்பிக்கையில் ஊறித் திளைத்திருக்கிறார் என்பது வெள்ளிடைமலையெனத் தெற்றென விளங்கும்