சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை பெரியாரின் பிறந்த நாள் இன்று

1879 செப்டம்பர் 17: ஈரோட்டில் பெரியார் பிறந்தார். பெற்-றோர்: வெங்கட்ட (நாயக்கர்) – சின்னத்தாயம்மாள், உடன்பிறந்-தோர்: ஈ.வெ.கிருஷ்ணசாமி, கண்ணம்மாள், பொன்னுத்தாய். 1885 – 1889: வயது 6 முதல் 10 வயதுவரை 5 ஆண்டு பள்ளிப்படிப்பு 1895: திராவிடத்தைச் சதியால் அடக்கி ஆண்ட ஆரி-யத்தை கூர்மதியால் (தமது இல்லத்தில் நடக்கும் மதப்-பிரசங்கங்களில்) குறுக்குக் கேள்விகேட்டு பொய்யையும், … Continued

கடவுளும் – பண்பும்!

உலகமும் உலகத்தில் காணப்படுவனவும் தெய்வீகத் தன்மையால் ஏற்பட்டவை என்றால், இக்கணக்கற்ற தெய்வீகத் தன்மைகள் ஒவ்வொன்றாக சிறிது சிறிதுகாலமே இருந்து பின்னர் மறைந்து போவானேன்? தெய்வீகத்தன்மை என்பதுவே அநித்தியமா? சும்மா இருந்த கடவுள் திடீரென்று இவ்வுலகத்தை தோற்றுவிக்கும்படியான அவசியமோ, காரணமோ என்ன அவர் மூளையில் பாய்ந்தது?

கடவுளை நம்பும் முட்டாள்களே!

கடவுள்களை நம்பும் முட்டாள்களே! அதாவது கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவரே உலகைப் படைத்து காத்து நடத்தி வருகிறார்; அவரன்றி ஒரு அணுவும் அசையாது; அவரே உலக நடப்புக்குக் காரணஸ்தர் ஆவார் என்றெல்லாம் கருதி வரும் முட்டாள்களே! கடவுளால் உலகத்திற்கு, மனித சமூதாயத்திற்கு, ஜீவ கோடிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?